இறைவனைக் காண முடியுமா?
அக்டோபர் 19,2009,
16:36  IST
எழுத்தின் அளவு:

* ரோஜாவிடம் பூவினை மட்டும் பறிக்கவேண்டும். அதிலுள்ள முள்ளைப் பார்க்க வேண்டியதில்லை. அதுபோல, படிக்கும் சாஸ்திரங்களில் இருந்து சாரமானதை எடுத்துக் கொள்ள வேண்டும். வேண்டாதவற்றைத் தள்ளி விட வேண்டும்.* கடலில் ஒரு அலையைத் தொடர்ந்து இன்னொரு அலை கிளம்பிக் கொண்டே இருக்கும். அதுபோல, குதர்க்கவாதிகளின் மனதில் சந்தேக அலை அடித்தவண்ணமே இருக்கும்.
* உடலுக்குள் இருக்கும் உயிரையையே யாராலும் காண முடியவில்லை. அப்படியிருக்க உயிருக்கும் உயிரான இறைவனை யார் தான் காண முடியும்? உடலின் அசைவைக் கொண்டு உயிர் இருப்பதை உணர்கிறோம். அதுபோல, உலக இயக்கத்தைக் கொண்டு இறைவனை உணரலாம்.
* மண்ணில் தோன்றிய அனைத்தும் மண்ணுக்குள்ளே மறைந்து விடும். அதுபோல உலகம் பரம்பொருளான இறைவனிடமே தோன்றி இறைவனிடமே மறைந்து விடுகிறது.
* சத்தியமே இறைவனின் வடிவம். சத்தியத்தை புறக்கணிப்பவன் யாராக இருந்தாலும் இறைவனைப் புறக்கணிப்பவன் ஆவான்.
* ஈரமண்ணில் செடி வளரும். காய்ந்த மண்ணில் துளிர்க்காமல் பட்டுவிடும். அதுபோல இரக்கம் உள்ள மிருதுவான இதயத்தில் தான் பக்திப்பயிர் வளரும். கல்நெஞ்சில் பக்திக்கு சிறிதும் இடமில்லை.
* காற்றுக்கு உலர்த்துவது தர்மம். நெருப்புக்கு சுடுவது தர்மம். தண்ணீருக்கு நனைப்பது தர்மம். அதுபோல, மனிதனுக்கு கட்டுப்பாடு தான் தர்மம்.
-கிருஷ்ணப்ரேமி சுவாமி

Advertisement
கிருஷ்ண ‌பிரேமி சுவாமி ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement