மனக் கருவியை பராமரியுங்கள்
டிசம்பர் 10,2007,
22:50  IST
எழுத்தின் அளவு:

* வைராக்கியமும் விவேகமும் பெற்ற மனிதர்கள் எல்லாரும் நல்ல பாதையைத் தேர்ந்தெடுத்து, மனித இனத்திலுள்ள மற்றவர்களை நிரந்தரமான சாந்திக்கும் ஆனந்தத்திற்கும் அழைத்துச் செல்கிறார்கள்.

* மனிதர்களின் பிறப்புரிமையான நிறைவிலும் சந்தோஷத்திலும் வாழக்கூடிய ஒரு முழுமையான, அமைதியான அரசாங்க முறையை கண்டுபிடிப்பதில், எந்த ஒரு யுத்தமோ, புரட்சியோ வெற்றியடையவில்லை.

* வாழ்க்கையில் ஒவ்வொரு அனுபவமும் அனுபவிப்பவர், அனுபவிக்கப்படும் பொருள், இவ்விரண்டிற்குமுள்ள அனுபவம் என்ற மூன்று முக்கிய பிரிவுகளைக் கொண்டது ஆகும்.

* வாழ்க்கையில் இன்பமான அனுபவங்களை அடைய அகத்தையும், புறத்தையும் பக்குவப்படுத்த வேண்டும்.

* அனுபவங்களின் அடுக்குத் தொடர்ச்சியே வாழ்க்கை எனப்படும். ஒரு செங்கல் சுவரின் ஒரு பகுதி ஆவதுபோல, ஒரு அனுபவம் வாழ்க்கையின் ஒரு பகுதி ஆகிறது.

* வாழ்க்கையின் இடையூறுகளுக்கு விடை நம்முடைய அனுபவங்களை சீர் செய்வதில் இருக்கிறது.

* ஆரோக்கியமான புத்திபூர்வமான வாழ்க்கைக்கு மதநூல்கள் சந்தேகமின்றி நமக்கு வழிகாட்டுகின்றன. ஆனால், நம்முடைய முழு முயற்சியும், மன உறுதியுமே அதை அடைய நமக்கு உதவ முடியும்.

*மனிதனின் மனம் ஒரு கருவிதான். தான் தொடர்பு கொள்ளும் பொருள்களால், இன்பத்தையோ அல்லது துன்பத்தையோ அனுபவிக்கிறது. இந்தக்கருவி சரியாக இருந்தால் மனிதன் வாழ்க்கையில் ஒரு லயத்தையும் இனிமையையும் அனுபவிக்கிறான். ஆனால், இந்தக்கருவி கவனிப்பாரின்றி உபயோகப்படுத்தப்படாமல் கிடந்தால் குழப்பம் எழுகிறது.

Advertisement
சின்மயானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement