கடவுளின் கரங்களில் உங்களை ஒப்படைத்து விடுங்கள்.
டிசம்பர் 10,2007,
22:51  IST
எழுத்தின் அளவு:

வெற்றியோ, தோல்வியோ அவன் அளிக்கட்டும். அதனாலென்ன? அவர் உங்களைச் சிரமப்படுத்துவதில் உறுதியாயிருக்கலாம். முடிவில் பார்க்கும்போது அது உங்கள் நன்மைக்காகவே கூட இருக்கலாம். உங்களால் எப்படி அதை அறிந்துகொள்ள முடியும்? நீங்கள் யார் அதை அறிய? சிறப்பாகச் செயல் புரிந்து விட்டுச் சும்மாயிருங்கள்!

நீங்கள் எல்லோரும் மகிழ்ச்சியுடன் வாழ புதிய வீடுகள் கட்டிக் கொள்ள வேண்டுமென விரும்புகிறேன். அங்கே கட வுளைப் பிரதிஷ்டை செய்து வைக்க வேண்டுமென ஆசைப்படுகிறேன். நான் சொல்லுவது செங்கல், சுண்ணாம்பு, வீடு அல்ல, நல்ல எண்ணங்கள், நல்ல சொற்கள், நல்ல செயல்கள், நல்ல சுற்றம். அங்கே நீங்கள் அமைதியாக வாழ இயலும். அனைவரும் கூட்டாக அந்த வீடு கட்டி கிரகப்பிரவேசத்திற்கு என்னை அழைக்க முடியும். நான் ஆர்வமுடன் இசைவேன். அவ்வீடுகள் என்னுடையவை. நான் வந்து உள்ளே நுழைய அழைப்புகூடத் தேவையில்லை. ஆன்மிக ஆனந்தத்துக்கான வீடு அது! என் இருப்பிடம் என்னை விரும்பும் தூய இதயம்தான்.

பக்தி உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும். கடவுளின் கருணையைக் கொண்டு வரும். மேகங்கள் திரண்டு வயல்கள் மீது மழை பொழிய வேண்டும். உயிரூட்டும் நீரைத் தாவரங்கள் மேலெழுந்து பருக முடியாது. பக்தி கடவுளைக் கீழே நம்மிடம் கொண்டுவரும் ஆற்றல் பெற்றது.

பக்தன் தன் உடல், மனம், வாழ்வு அனைத்தையும் கடவுளுக்கு அர்ப்பணித்து விட்டால் அவர் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வார். ஏனென்றால், அவர் எப்போதும் நம்முடனேயே இருப்பார்.

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement