உண்மையான மகிழ்ச்சி எது?
நவம்பர் 15,2009,
13:47  IST
எழுத்தின் அளவு:

* உலக சம்பந்தமான பெயருக்கும் புகழுக்கும் கவுரவத்திற்கும் ஆசைப்பட்டு உங்களுடைய நாணயத்தைத் துறக்காதீர்கள். ஒற்றுமையையும், ஒன்றாக உழைக்கும் மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்ளுங்கள். விருப்பு வெறுப்புகளை விட்டுவிட்டு எளிய மக்களிடம் அன்பு காட்டுங்கள். மானிடசேவையே மாதவன் சேவை என்பதை உணருங்கள்.
* வயதாகிவிட்டது என்ற உணர்வையும், அதனால் நம்மால் ஏதும் செய்ய முடியவில்லையே என்ற சோர்வையும் விட்டுத் தள்ளுங்கள். நடந்து போனதை எண்ணில் மனச்சுமையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். இருப்பதை உற்சாத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள். செய்யும் செயலில் உங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.
* பிறருக்கு உதவி செய்வதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது என்ற உண்மையை எப்போதும் நினைவில் வைத்துக் கொளளுங்கள். பொறாமையால் மனம் புழுங்கினால் அந்த இடம் நரகம். நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். நல்ல எண்ணங்கள் நம் மனதில் தெய்வீக ஆற்றலை உண்டாக்குகின்றன.
சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement