அனைத்திலும் இருப்பான் ஆண்டவன்
நவம்பர் 15,2009,
14:25  IST
எழுத்தின் அளவு:

உலகிலுள்ள அனைத்துப் பொருள்களிலும் எல்லா உயிர்களிலும் ஆண்டவன் இருக்கிறார். பூஜைக்கு அமைத்து வழிபடும் மூர்த்திகளிலும், சித்திரங்களிலும் இருக்கும் இறையுருவை "அர்ச்சாவதாரம்' என்று இறைவடிவமாகவே பாவித்து வழிபடுவது மரபு. நமது பக்திக்குக் கட்டுப்பட்டு இறைவன் அச்சித்திரத்திலோ, மூர்த்தியிலோ தோன்றுகிறார். அதனால் தான் நாயன்மார்களும், ஆழ்வார்களும் இறைவனை நேரில் கண்டு மனதை பறிகொடுத்த நிலையில் ஆனந்தித்து ஆடிப்பாடியுள்ளனர்.
தெருவில் குழந்தைகள் விளையாட்டாக வரைந்திருந்த பள்ளிகொண்டான் உருவத்தை வழியில் சென்று கொண்டிருந்த ராமானுஜர் கண்டார். அப்படியே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வழிபட்டார். சிறுகுழந்தைகள் மண்ணில் வரைந்திருந்த கோலத்தில் கூட, மகான்கள் அப்பரம்பொருளையே கண்டு நமக்கு வழிகாட்டியுள்ளனர். அதனால் நாம் வீட்டில் வைத்திருக்கும் பதுமைகளையும், சித்திரங்களையும் ஆண்டவனாக பாவித்து வழிபாடு செய்வது அறிவுடைமையேயாகும். இதில் அறியாமை சிறிதும் இல்லை.
-ராஜாஜி

Advertisement
ராஜாஜி ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement