வாழ்வை நீட்டிக்க முடியாது
நவம்பர் 15,2009,
14:29  IST
எழுத்தின் அளவு:

* கசப்பான மருந்து நன்மையை விளைவிப்பது போன்று
நண்பனின் வார்த்தை கசப்பாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இன்றைய துன்பம் நாளைய நன்மைக்கு அடித்தளமாகும்.
* எவன் ஒருவன் மற்றவர்களுக்குத் தன்னால் உண்டான தீங்கினைப் போக்க விரும்புகிறானோ, அவன் தர்மத்தைப் பின்பற்ற முயற்சி செய்கிறான். அந்தக் குணம் இல்லாதவன் அதர்மவழியில் சென்று மானம், மரியாதையை இழந்து விடுவான்.
* வாழ்க்கையை நாம் எண்ணும் அளவிற்கு நீட்டிக் கொண்டே போக முடியாது. வரையறைக்கு உட்பட்டது நம் வாழ்க்கை. ஆகவே, இருக்கும் நாட்களை மற்றவர் நலனுக்காகச் செலவிட விரைந்து முயற்சி செய்யுங்கள்.
* துயரத்தைக் கண்டு உலக உயிர்கள் அஞ்சிக் கலங்குகின்றன. இதனை <உணர்ந்து வாழ்வில் எவ்வுயிருக்கும் துன்பம் செய்யாமல், அறவழியில் நடக்க ஒவ்வொரு மனிதனும் அக்கறை கொள்ள வேண்டும்.
* புலனடக்கம் என்பது வெறும் புலன்களை மட்டும் சார்ந்தது அல்ல. மனம், மொழி, மெய் என்ற மூன்றையும் அடக்கி வாழ்வதே புலனடக்கம் ஆகும்.
* ஒரு மனிதன் இறந்த பின்னர் கீழான பிறவி எடுக்க நேர்ந்தால் மீண்டும் மனிதப்பிறவி எடுப்பது என்பது மிகவும் அரிய செயலாகும். வாழும் ஒவ்வொரு நாளும் ஆன்மிக வாழ்வில் நேர்மையுடையவர்களாய் வாழ்ந்து நற்கதி அடைய வேண்டும்.
-மகாவீரர்

Advertisement
மகாவீரர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement