கடமையிலிருந்து தவறாதீர்
நவம்பர் 29,2009,
14:38  IST
எழுத்தின் அளவு:

* கடல் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அதில் எவ்வளவு நீர் நிறைந்திருந்தாலும் அந்த நீர் நம் தாகத்தைத் தணிப்பதில்லை. ஆனால், ஊற்று நீர் சிறியதாக இருந்தாலும், நம் தாகத்தைத் தணித்து விடும். அதுபோல, வாய்பேசும் பண்டிதனைக் காட்டிலும், ஞானியின் ஒரு வார்த்தை கூட நமக்கு நல்வழிக் காட்டும் தன்மையுடையது.
* உலகம் இயற்கையாகவே இயங்குவது போல் தோன்றினாலும், இதனை இயக்கும் அருட்சக்தியைத் தான் பகவான் என்று குறிப்பிடுகிறோம். பகவான் இன்றி உலகில் எச்செயலும் நடைபெறுவதில்லை.
* மண் இல்லாமல் எப்படி மண்குடம் உண்டாகாதோ, எப்படி தங்கம் இல்லாமல் ஆபரணம் உண்டாகாதோ அதுபோல கடவுள் இல்லாமல் உலகம் உண்டாவதில்லை.
* தோலால் ஆன பர்ஸ் அழகாக இருந்தாலும், அதில் பணமிருந்தால் மட்டுமே மதிப்பு உண்டாகும். அதுபோல சரீரம் என்னும் இந்த பையிலும் உயிர் இருந்தால் மட்டுமே உடம்புக்கு மதிப்புண்டு.
* ஒவ்வொரு நாளும் பாடம் நடத்தும் ஆசிரியர் முதல்நாள் விட்ட இடத்திலிருந்து பாடத்தைத் தொடங்குவது போல, நாமும் சென்ற பிறவியின் தொடர்ச்சியையே இப்பிறவியில் தொடர்கிறோம்.
* பிராணிகள் கூட கடமையிலிருந்து ஒருபோதும் விலகுவதில்லை. நாய் வீட்டைக் காக்க தவறுவதில்லை. பசு பால் தர மறுப்பதில்லை. ஆனால், மனிதன் மட்டும் தன் கடமையிலிருந்து தவறி விடுகிறான்.
-கிருஷ்ணப்ரேமி சுவாமிகள்

Advertisement
கிருஷ்ண ‌பிரேமி சுவாமி ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement