இதயம் பூந்தோட்டமாகட்டும்
நவம்பர் 29,2009,
14:39  IST
எழுத்தின் அளவு:

* மனிதன் விதை போன்றவன். விதை முளைத்துச் செடியாக வளர்ந்து முடிவில் மரமாகிக் கனிகள் தருவது போல, மனிதனும் வளர்ந்து அமைதிப் பூக்களாக மலர்ந்து உலகில் பிறருக்கு பயனுள்ளவர்களாக வாழ வேண்டும்.
* அறிவாற்றலை நமக்கு ஆண்டவன் எதற்கு அளித்திருக்கிறார்? செல்வம் சேர்ப்பதற்காக மட்டுமே அதனைப் பயன்படுத்தக்கூடாது. பரம்பொருளை அறிவதற்காகவே நமக்கு அறிவு அமைந்திருக்கிறது.
* கடவுளிடம் கேட்டது கிடைக்கும்வரை, எண்ணங்கள் நிறைவேறும்வரை அச்சிந்தனையிலிருந்து மாறிவிடாதே. உன் பக்தியையும், தளராத மனவுறுதியையும் பார்த்துக் கடவுள் இணங்கிவிடுவார். நீ கேட்டது அத்தனையையும் நிச்சயம் பெறுவாய்.
* அடுத்தவர்களுக்குச் செய்யும் நலம் உனக்கே நன்மைகளைத் தரவல்லது. அடுத்தவர்களுக்கு கேடு நினைத்தால் அக்கேட்டினை உனக்கு நீயே செய்து கொள்கிறாய்.
* இதயம் என்பது நிலம் போன்றது. அதனைச் சுத்தம் செய்து அதிலிருக்கும் முட்களை நீக்கி, அன்பால் உழுது அருள்நீரைப் பாய்ச்ச வேண்டும். பகவந்நாமா என்னும் விதையை விதைத்தால் இதயம் நல்ல பூந்தோட்டமாக மாறிவிடும்.
* கடவுள் பக்தி, கடமையுணர்வு, கட்டுப்பாடு இம்மூன்றையும் பெற்ற ஒருவன் இருக்கும் இடம் புனிதத்தன்மை பெற்றுவிடும்.
-சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement