முன்னேற வழியிருக்கு!
நவம்பர் 18,2013,
12:11  IST
எழுத்தின் அளவு:

* ஏழைகள் வருந்தினால் நமக்கென்ன என்று நினைப்பவன் மூடன். உலகில் சிலர் மட்டுமே சவுகரியமாக வாழ்வது என்பது சாத்தியமில்லாதது.
* ஏமாற்றுபவனை மற்றவர்களும் ஏமாற்றுவார்கள். அணு அளவும் பிறரை ஏமாற்றுவதில்லை என்ற பரிபூரணநிலையை
அடைந்தவன் கடவுளுக்கு சமம்.
* மனதில் தோன்றி மறையும் எண்ணங்கள் அழிந்து போவதில்லை. அதற்கான விதைகளை அழித்தாலன்றி முழுமையான விடுதலை உண்டாகாது.
* நம்பிக்கை, மனவுறுதி, உடல் உழைப்பு முதலிய நற்குணங்களை வளர்த்துக் கொண்டால் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
* ஒருவரை ஒருவர் தாழ்த்த முற்படாமல், கலந்து வாழ்வதே இன்பம். ஒற்றுமையே வலிமை தரும். வாழ்ந்தாலும், வீழ்ந்தாலும் ஒற்றுமையைக் கைவிடுதல் கூடாது.
- பாரதியார்

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement