'தயக்கம்' ஒரு தடைக்கல்
டிசம்பர் 10,2007,
22:55  IST
எழுத்தின் அளவு:

படைப்பாற்றல் கொண்டது வார்த்தை. சக்திமிக்க வார்த்தைகள் மந்திரமாகும். வார்த்தை சக்திமிக்கது. அது உருவாக்கும், உருமாற்றம் செய்யும். நல்லதும் செய்யும், கெட்டதும் செய்யும். அதிர்வை ஏற்படுத்தும். அதன் விளைவை நீங்கள் சந்தித்தே தீர வேண்டும்.

கடவுளிடம் பிரார்த்திக்கிறபோது எண்ணத்துடன் வார்த்தையும், வார்த்தையின் ஒலியும் சேர்ந்து பிரார்த்தனையின் பலனைப் பெற்றுத்தரும்.

தடையைக்கண்டு பின்வாங்குகிறவர் பத்துமடங்கு சிரமத்தை அனுபவிக்கும்படி ஆகிறது. உங்களுடைய தயக்கம், பலவீனம், கோழைத்தனம் எதுவும் தடையாகக்கூடும்.

தம்முடைய பாதையை ஒருமுறை இழந்தவர் மீண்டும் அதனைக் கண்டுபிடிப்பது கடினம். விரும்பத்தகாத சக்திகளுக்கு நாம் இரையாகிக் கொண்டிருப்பதாய் ஏன் கருதுகிறீர்கள்? துணிவுடன் போராடுங்கள். துணிவு எல்லா அபாயங்களையும் எதிர்த்து நிற்கும்.

தன்னம்பிக்கை உள்ள இடத்தில் தயக்கமும் அச்சமும் இருக்காது.

என் உதவி உங்களுக்கு நிச்சயம் உண்டு. அதற்காகத்தானே நான் இருக்கிறேன்.

உங்கள் இதயத்தை, ஆன்மாவை அதன் துயரங்களை நான் அறிவேன். உங்கள் ஆன்மாவின் பக்கத்தில் நான் இருக்கிறேன். வெற்றி நிச்சயம் என்பதில் நீங்கள் உறுதியாயிருக்கலாம்.

ண நான் அன்பிலும் அமைதியிலும் எப்போதும் உங்களுடன் உள்ளேன். பிரதிபலன் கருதாது என்னிடம் உங்களை ஒப்படைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய எல்லாத் துன்பங்களுக்கும் முடிவு கிடைத்துவிடும்.

Advertisement
ஸ்ரீ அன்னை ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement