பதில் சொல்லியே ஆகவேண்டும்
டிசம்பர் 15,2009,
16:08  IST
எழுத்தின் அளவு:

* நம்முடைய பிறப்பும் நம்முடைய வாழ்க்கையும் முற்பிறவியின் பயனால் ஏற்படுகிறது என்பதே உண்மை. இதை நிர்ணயிக்கும் உரிமை நம் கையில் இல்லை. நம் விருப்பப்படி வாழ்க்கையை நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது.ஆனால், நம்மால் வாழ்க்கையின் போக்கை மாற்றிக்கொள்ள முடியும்.
* வாழ்க்கை சீட்டாட்டம் போன்றது. அந்த ஆட்டத்தின் விதிகளை நாம் மீற முடியாது. எப்படி ஆடவேண்டும் என்பது மட்டும் நமக்குத் தெரியும். ஆனால், நம் கைக்கு வரும் சீட்டுகளை எடுத்துக் கொள்ளும் உரிமை நமக்கு இல்லை. கிடைத்த சீட்டுகளைக் கொண்டு மட்டுமே ஆட வேண்டியிருக்கிறது. நல்ல ஆட்டக்காரர் சாதாரண சீட்டுகளை வைத்துக் கூட வெற்றிகரமாக ஆடமுடியும். மோசமான ஆட்டக்காரர் சரியாக ஆட முடியாமல் போய்விடுவார்.
* விலங்குகளுக்கு இல்லாத பகுத்தறிவு மனிதர்களுக்கு மட்டுமே இருக்கிறது. தன் நியாயமான ஆசாபாசங்களுக்கு உட்பட்டு பிறருக்கு தீங்கேதும் நினைக்காமல் வாழ வேண்டும். முடிந்தால் சமுதாயத்திற்கு தன்னால் முடிந்த நன்மைகளைச் செய்தாலே போதும். நாம் செய்கின்ற செயல் நன்மையோ அல்லது தீமையோ அதற்கான பதிலை நாம் வரும் பிறவிகளில் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்ற உண்மையை ஒருபோதும் மறக்கலாகாது.
- டாக்டர் ராதாகிருஷ்ணன்

Advertisement
ராதாகிருஷ்ணன் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement