பண்பாட்டுப் பெட்டகம் பெண்
டிசம்பர் 18,2009,
16:03  IST
எழுத்தின் அளவு:

* பெண்கள் ஆண்களைப் போல படிக்கலாம். திறமைக்குத் தகுந்த வேலையும் செய்யலாம். ஆனால், அதற்காக கட்டுப்பாடு இல்லாமல் சுதந்திரத்தோடு திரிவது என்பது நல்ல விஷயமல்ல. அது பெண்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் தீங்கினைத் தருவதாகும்.
* பெண்களுக்கு கல்வி என்பது விவேகத்தையும், நன்மையை நாடும் நல்ல குணத்தையும் கொடுப்பதாக இருக்க வேண்டும். நல்ல அடிப்படை ஒழுக்கம் மிகுந்த பெண்களை நம்பித் தான் இந்த சமுதாயமே அமைந்துள்ளது.
* சுலாபா, சாவித்திரி, கார்க்கி, நளாயினி, அனுசூயா போன்ற புராணப்பெண்கள் கல்வியறிவையும், கற்புநெறியிலும் சிறந்தவர்களாகத் திகழ்ந்தார்கள் என்ற உண்மையை நாம் உணர வேண்டும். இப்படிப்பட்ட பெண்மணிகளையே நம் வாழ்வின் வழிகாட்டிகளாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பெண்களே ஆன்மிக வளத்தை எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் கடமையைக் கொண்டுள்ளார்கள். தாய்மார்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே பிள்ளைகளை பக்தியுணர்வோடு வளர்க்க வேண்டும்.
* இன்றைய நவீன கல்வியைக் கற்பதோடு நம் பண்பாட்டுக்கல்வி இணைந்தால் மட்டுமே நம் வாழ்க்கை முழுமையானதாக அமையும். பண்பாட்டினைப் பாதுகாக்கும் பெட்டகங்களாக பெண்களின் வாழ்வியல் முறை அமையவேண்டும்.
-சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement