சிரிக்க மறக்காதீர்கள்
டிசம்பர் 18,2009,
16:05  IST
எழுத்தின் அளவு:

* வாழ்க்கையின் சிரமம் மிகுந்த நேரங்களையும், நோய்களையும், வேதனைகளையும் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கக் கற்றுக்கொள்ளுங்கள். அவை எல்லாம் மாறிவிடக்கூடியவையே என்பதை உணருங்கள். வெயிலின் கடுமையை அனுபவித்தவர்கள் பின்னாளில் மழையும், குளிரும் நிறைந்த பருவம் விரைவில் வரக் காத்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
* வாழ்க்கையை மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டு உணர்ச்சிவயப்படும் மனிதர்களிடம் அதிகமாகப் பழகாதீர்கள். உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலை உங்களை நெருக்குவதாக நினைக்காதீர்கள். எல்லாவற்றையும் எளிமையாக எடுத்துக் கொள்ள கற்றுக் கொள்ளுங்கள்.
* ஆண்டவன் தரும் சோதனை அனைத்தையும் அவன் தரும் விளையாடல்கள் என்று எடுத்துக் கொள்ளுங்கள். ஒருநாளும் சிரிக்க மறக்காதீர்கள். ஆண்டவனை உங்கள் தோழனாகவே கருதி, அவனுக்கு நிகராக விளையாடுவதில் ஆர்வம் கொள்ளுங்கள். ஆண்டவன் எங்கும் இருக்கிறான், எதிலும் இருக்கிறான் என்று எண்ணத் தொடங்கி விட்டால், எல்லாவற்றிலும் மகிழ்ச்சி ஏற்படத் தொடங்கிவிடும்.
-ஸ்ரீஅன்னை

Advertisement
ஸ்ரீ அன்னை ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement