முயற்சியே உயர்வு தரும்
டிசம்பர் 18,2009,
16:06  IST
எழுத்தின் அளவு:

* நீரில் உள்ள தாமரை மலர்த்தண்டின் நீட்டம் அந்நீரின் ஆழத்தின் அளவைப் பொறுத்தது. அதுபோல,ஒருவரின் உயர்வு அவன் மேற்கொள்ளும் முயற்சியைப் பொறுத்தே அமையும்.
* சோம்பல் தன்னைக் கொண்ட வனையே அழிக்கும் தன்மையுடையது. சோம்பலை உடையவனின் குடும்பப்பெருமை அவன் வாழும் காலத்திலேயே சிதைந்து விடும்.
* தன் செல்வ வளத்தைப் பிறருக்கு நன்மை செய்வதில் செலவிடும் நல்லவர் களிடம் இருக்கும் வறுமை கொடியது. அதைவிட, தன் செல்வத்தால் பிறருக்கு தீங்கிழைக்கும் கொடியவர்களிடம இருக்கும் செல்வம் மிகக் கொடியதாகும்.
* பகைவர்களால் கேடு விளையத்தவறினாலும் ஒருவன் கொண்ட தீயஎண்ணமாகிய பொறாமையே அவனுக்குத் தவறாமல் கெடுதலை உண்டாக்கும். ஆகையால், பொறாமை கொண்டவன் அழிவதற்கு வேறொன்றும் தேவையில்லை.
* விருப்பும் வெறுப்பும் இல்லாமல் அனைத்து உயிர்களுக்கும் அருள்கின்ற இறைவனைப் போற்றி வணங்கி வழிபபவர்களுக்கு இன்பமே அன்றி எந்நாளும் துன்பம் உண்டாவதில்லை.
- திருவள்ளுவர்

Advertisement
திருவள்ளுவர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement