வாழ்வதற்கான தகுதி தைரியமே!
டிசம்பர் 18,2009,
16:07  IST
எழுத்தின் அளவு:

* ஒருவன் எத்தனை விசேஷ அனுகூலங்கள் படைத்திருந்த போதிலும், ஏதேனும் ஒரு விஷயத்தில் அவன் வேறு சிலருக்கு குறைந்தனவாகவே இருக்கும்படி இயற்கை அமைப்பு அமைத்திருக்கிறது.
* மனிதர்கள் எலி பொறிக்குள் சிக்கிக் கொள்வதுபோல, ஒரு சில வளையங்களுக்குள் உட்பட்டுத் தவிக்கிறார்கள். இதனால், மனிதவாழ்க்கை நரகம் போல் தீராத துன்பத்தை தருவதாக மாறிவிட்டது.
* மனிதனுக்குள் பரமாத்மாவின் சக்தி நிகழ்கின்றது. சாமான்ய நிலையில் அது மனிதனுடைய அறிவில் தோன்றாமல் மறைந்து கிடக்கிறது. நமக்குள் சிறுமை உணர்ச்சி இருக்கும் வரை இச்சக்தி நம்மில் வெளிப்பட்டுத் தோன்றுவதில்லை.
* படித்தவன் படிக்காதவனை வெறுமனே குருடனாகக் கருதி நடத்துகிறான். பணமுடையவனோ பணமில்லாதவனைப் பிணமாகக் கருதி அவமானப்படுத்துகிறான்.
* ஒவ்வொரு நிமிடமும் சத்தியமே பேசி, தர்மத்தையே செய்து பரம்பொருளை அடைவதே லட்சியம் என்று வாழ்பவன் மனிதன் என்றும் தெய்வம் என்றும் சொல்வதற்கு உரியவனாகிறான்.
* அஞ்சாத மனோதைரியம் கொண்டிருப்பதைவிடச் சிறந்த புண்ணியம் வேறொன்று இம்மண்ணிலுமில்லை. மேலுலகத்திலுமில்லை. அம்மனிதன் எல்லா இன்பங்களையும் பெறத் தகுதியுடையவனாகிறான்.
பாரதியார்

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement