மனிதவாழ்வின் அஸ்திவாரம்.
டிசம்பர் 18,2009,
16:09  IST
எழுத்தின் அளவு:

* தர்மத்தை நாம் வாழ வைத்தால் தனது பங்காகத் தர்மம் நம்மை வாழ வைக்கும். தர்மத்தை நாம் அழித்தால் தர்மம் நம்மை அழித்து விடும். தர்மத்தின் அடிப்படையில் மட்டுமே நாம் செயல்களைச் செய்ய வேண்டும். இயன்றவழி வகைகளில் எல்லாம் தர்மத்தைப் பின்பற்ற வேண்டியது நம் கடமை. ராமகாவியத்தைப் பாடிய கம்பன் தமது முடிந்த முடிவாக, ""அறம் வெல்லும்; பாவம் தோற்கும்'' இதுவே ராமகாதையின் சாரம் என்று குறிப்பிடுகிறார்.
* பிறருக்கு உதவி செய்து வாழ வேண்டும். அதைச் செய்யமுடியாத போது பிறருக்கு தீங்கு செய்யக் கூடாது. ""நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும், அல்லவை செய்தல் ஓம்புமின்!'' என்று வலியுறுத்துவதைப் புறநானூறு வலியுறுத்துவதைக் காணலாம்.
* மனிதன் காமம், பயம், பேராசை ஆகியவற்றுக்கு ஆட்படும்போது தான் அதர்மம் செய்கிறான். எனவே, இப்படிப்பட்ட தீயகுணங்களிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம்.
* பாம்பு, தேள் போன்ற விஷஜந்துக்கள் நம் வீட்டில் புகுந்தால் எப்படி நாம் எச்சரிக்கையாக இருக்கிறோமோ அதுபோல, தீயகுணங்களிலிருந்து மனிதன் தன்னை காத்துக் கொள்ளாவிட்டால் அக்குணங்களுக்கு ஆளாகி பலியாகிவிட நேரிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பெரிய கட்டடத்தை அதன் அஸ்திவாரம் தாங்குகிறது. அதுபோல, மனித வாழ்க்கைக்கு தர்மமாகிய அறமே அஸ்திவாரம் என்று சாஸ்திரங்கள் பேசுகின்றன.
-கமலாத்மானந்தர்

Advertisement
கமலாத்மானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement