முதலில் கடமையைச் செய்யுங்கள்
டிசம்பர் 29,2009,
13:03  IST
எழுத்தின் அளவு:

* பெண்களைப் பொறுத்தவரையில் அவர்களைப் பலவீனமானவர்கள் என்று எண்ணுகிறோம். உண்மை அதுவல்ல. அவர்கள் சக்தியின் வடிவமாக பேராற்றல் பொருந்தியவர்களாக இருக்கிறார்கள்.
* நீரின் மேற்பரப்பில் கல்லைப் போட்டால் பலவித அலைகள் தோன்றும். இவ்வலைகள் மெல்ல மெல்ல கரையின் ஓரம் வரை பரவும். அதுபோல, நம் மனத்தில் ஓர் எண்ணம் விழுந்தால் அது நல்லதோ கெட்டதோ அது உடல் முழுவதும் தாக்கத்தை உண்டாக்கும்.
* நாம் காணும் இடத்தில் கடவுள் இருந்தாலும், நாம் இதயத்தில் கடவுளின் சிந்தனை இல்லாவிட்டால் நம்மால் கடவுளைக் காண இயலாது. ஆனால் கடவுளை நம் இதயத்தில் நிலைநிறுத்தி விட்டால் எங்கும் கடவுள் இருப்பதை உ<ணர முடியும்.
* வெப்பம் என்பது இல்லாவிட்டால் குளிர்ச்சியை இன்னதென்று நம்மால் அறியமுடியாது. குளிர்ச்சி என்பது இல்லாவிட்டாலும் உஷ்ணத்தை அறிய முடியாது. இன்பமும் துன்பமும் அப்படிப்பட்டதே. துன்பம் என்பதே இல்லாமல் போனால் இன்பத்திற்கும் மதிப்பில்லாமல் போய்விடும்.
* முதலில் கடமையைச் செய்யுங்கள். வெற்றி கிடைக்குமோ கிடைக்காதோ என்று சிந்தித்துக் கொண்டே இருக்காதீர்கள். வெற்றி தோல்வியைக் கடவுளிடம் விட்டுவிடு முயற்சியை மட்டும் மேற்கொள்ளுங்கள்.
----சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement