கடவுளுக்கு அர்ப்பணிப்போம்
டிசம்பர் 31,2009,
14:33  IST
எழுத்தின் அளவு:

* இறைவன் வெளியிலும், வெகு தொலைவிலும் இருப்பதாகத் தோன்றும் வரையில் அஞ்ஞானம் இருக்கும். ஆனால், நம் உள்ளத்துக்குள்ளேயே அவன் இருப்பதாக உணர்ந்து கொண்டால் ஞானம் உண்டாகி விடும்.
* தனது இதயத்திற்குள் இறைவனைக் கண்டவன், வெளியுலகத்திலும் அவனைக் காண்பான். தனக்குள்ளே இறைவனைக் காணாதவன், கோயிலிலோ பிற இடங்களிலோ அவனைக் காண இயலாது.
* குணத்தாலும், அளவாலும் ஞானம் வேறுபடும். சாதாரண மனிதர்களுடைய ஞானம், ஓர் அறையை மட்டும் பிரகாசமடையச் செய்யும் தீபச்சுடரைப் போன்றது. பக்தனுடைய ஞானம் சந்திரனின் பிரகாசத்தைப் போன்றது. அவதார புருஷரின் ஞானம் பலமடங்குசக்தி கொண்ட சூரியப்பிரகாசத்தைப் போன்றது.
* இறைவனுக்கு அர்ப்பணம் செய்யும் பொருள்கள் எல்லாம் ஆயிரம் மடங்காக நமக்கே மீண்டும் திரும்பிவிடும். ஆனால், செய்யும் செயல்கள் எல்லாவற்றையும் கடவுளுக்கு அர்ப்பணிக்கும் எண்ணத்துடன் செய்பவர்களை இன்ப துன்பங்கள் தீண்டுவதில்லை.
* ஆயிரம் வழிமுறைகளில் முயன்றாலும், இறைவனுடைய அருளில்லாமல் எதனையும் அடைய முடியாது. இறைவனின் கருணை இன்றி யாரும் அவனை உணர முடியாது.
* காற்று எங்கும் நிறைந்திருந்தாலும், பாய்மரத்தை அதன் போக்கில் விரித்தால் தான் படகு தடையின்றி செல்லும். அதுபோல இறைவனின் கருணை எங்கும் நிறைந்திருந்தாலும், மனம் என்னும் பாய்மரத்தை அவன் பக்கம் விரித்தால் தான், சாதகமான சூழ்நிலையை அடையலாம்.
-ராமகிருஷ்ணர்

Advertisement
ராமகிருஷ்ணர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement