முயற்சியும், பொறுமையும் வேண்டும்
டிசம்பர் 11,2007,
21:14  IST
எழுத்தின் அளவு:

தூய சிந்தனையாக, மிக உயர்ந்த மனசாட்சியாக உன் இதயத்தில் இருப்பதே இறைவன்தான். அது கடவுள் தான். வேறெங்கும் தேட வேண்டிய அவசியமில்லை.

மனம் உள் முகப்படுத்தப்படும்போது, ஆத்மாவையே காண்கிறது. வெளிச்சூழ்நிலைகளைக் காண்பது இல்லை. அதில் வெப்பம், தட்பம், துன்பங்கட்கு இடையிலான வேறுபாட்டைக் காணமாட்டீர்கள்.

மக்கட்கு உண்மையென்பது விரும்பக் கூடியதல்ல. அவர்கள் உண்மையல்லாதவற்றையே விரும்புகின்றனர். ஒரு கடைக்குச் சென்று கள், சாராயம் போன்ற போதைப்பானங்களை வாங்க விழைகின்றனர். அவர்கள் வீட்டு வாசற்படியில் கிடைக்கும் பால், மோர் முதலியவை மலிவாகக் கிடைப்பினும் அவற்றை விரும்புவதில்லை.

நம் வாழ்நாள் பனிக்கட்டி போல உருகிக்கொண்டே போகிறது. பிறவியெடுத்ததன் நோக்கத்தை அறிந்துகொண்டு இறைவனோடு இணைய வேண்டும்.

உலகம் துன்பமயமானது. மனித உடல் நோய் வயமானது.உடல் பாழடைந்த வீடு போல இருக்கிறது. இந்த நிலையில் சங்கரருக்கு அமைதியாக வாழ முடிந்தது. இந்த உலகப் பற்றைக் கடந்தும், தெய்வீக வழியில் நடந்தும் சாத்தியமானது.

''ஸ்ரம'' ''தம'' என இரு காவல்காரர்கள் இறைவன் வீட்டு வாயிலில் இருக்கின்றனர். அதாவது முயற்சியும், பொறுமையும், எவ்வளவுதான் உன்னையே நீ சரணாகதி செய்து முழுமையாகக் கொடுத்தாலும், கடவுளின் உலகத்தையடைய ''ஸ்ரம'' ''தம'' - முயற்சி, பொறுமையென இவை இரண்டுமின்றி அடைய முடியாது.

கடவுள் சக்தி மின்சக்தி போன்றது. நம் உடல்கள் மின்பல்புகள் போன்றவை. நம் உள்ளத்தில் உள்ள நம்பிக்கைக்கு ஏற்பவே நம் உள்ள ஒளி புலப்படும்.

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement