செயலாற்றலை வளர்ப்போம்
ஜனவரி 08,2010,
14:41  IST
எழுத்தின் அளவு:

* ஒருவன் நல்ல செயல்களைச் செய்கிறானா, தீய செயல்களைச் செய்கிறானா என்பதை ஆராய்ந்து, நல்ல செயல்களை மட்டுமே சிந்தித்து செயலாற்றுபவனையே தேர்ந்தெடுக்க வேண்டும்.
* தான் செய்யும் செயல்களில் வருமானத்தை அதிகரித்து, நன்மைகளைப் பெருக்கி, சிக்கல்களை விலக்கி எவன் ஒருவன் செயல்படுகிறானோ அவனே ஒரு செயல் செய்ய ஏற்றவன் ஆவான்.
* நாம் ஒரு பணிக்காக எவ்வளவு தான் ஆராய்ந்து ஒருவரைத் தேர்வு செய்தாலும், செயல்படும்போது தங்கள் தன்மையில் மாறுபடுவார்கள். இருந்தாலும் தேர்ந்தெடுத்தபின், அவர்களையும் செயல்படத் தகுதியுடையவர்களாக மாற்ற வேண்டும்.
* செய்ய வேண்டிய வேலையின் தன்மையை அறிந்து, அதைப் பொறுமையாய் செய்பவர்களை விட்டுவிட்டு, மற்றவர்களிடத்தில் வேலையை ஒப்படைக்கக் கூடாது.
* ஒரு செயலை வெற்றியோடு முடிக்கும் தகுதியுடையவன் தானா? இந்த செயலை இவன் இப்படி முடிக்கும் தகுதி கொண்டவன் என்று ஆராய்ந்து அந்தச் செயலை அவனிடம் ஒப்படைத்தல் வேண்டும்.
* ஆழமான நீருக்குள் இருக்கும் முதலை, எவ்வளவு பலசாலியான எதிரியையும் வென்று விடும். ஆனால், அது கரைக்கு வந்துவிட்டால் பலம் குறைந்துபோகும். அதுபோல், தைரியமான செயல்களையும் தக்க இடம் பார்த்தே செய்ய வேண்டும்.
-திருவள்ளுவர்

Advertisement
திருவள்ளுவர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement