சுகம் தரும் பயணம்
ஜனவரி 21,2010,
09:28  IST
எழுத்தின் அளவு:

* கடினமான நிலத்தைப் பண்படுத்தும் உழவனிடமும், சாலை அமைக்கும் போது கல்லுடைக்கும் தொழிலாளியிடத்தும் இறைவன் இருக்கின்றான். ஆனால், இறைவன் சாமானியர்களான நம் கண்ணுக்குத் தெரிவதில்லை.
* மனிதன் மெய்யறிவு பெற்று விட்டால்,மீண்டும் குழந்தை நிலையை அடைகின்றான். அந்நிலையை எதிர்பார்த்து இறைவன் நமக்காக காத்து நிற்கிறான்.
* தன்னம்பிக்கை என்னும் ஒளியோடு இருப்பவர்கள் வாழ்க்கைப் பாதையில் வெற்றிநடை போடுவார்கள். அவர்களால் மற்றவர்களுக்கும் வழிகாட்ட முடியும்.
* நாமோ கல்நெஞ்சம் கொண்டவர்களாக இருக்கிறோம். ஆனால், நம்மை எல்லாம் படைத்த இறைவன் கருணைஉள்ளம் கொண்டவனாக விளங்குகிறான்.
* பெண்கள் மகிழ்ச்சியோடு இருப்பதில் தான் ஒட்டுமொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியே அடங்கி இருக்கிறது. வாழ்வின் இசை என்பதே பெண்களின் சிரிப்பில் தான் புதைந்து கிடக்கிறது.
* இறைவன் தனக்கான நண்பர்கள் கிடைப்பார்களா என்று தேடுகின்றான். மனித மனங்களில் அன்பு இருக்கிறதா என்று எதிர்பார்க்கிறான்.
* மனித உறவுகள் அன்பினாலே பிணைக்கப்பட்டுள்ளன. அன்பு என்னும் பாலத்தின் வழியாகப் பயணம் செய்தால் தான், நம் வாழ்க்கை சுவையானதாகவும், பொருளுடையதாகவும், சுகமானதாகவும் இருக்கும்.
-தாகூர்

Advertisement
ரவீந்திரநாத் தாகூர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement