ஒற்றுமையே உயிர்நாடி
பிப்ரவரி 19,2010,
12:10  IST
எழுத்தின் அளவு:

* ஒழுக்கமே மனிதனின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது. நன்மையோ, தீமையோ எதுவானாலும் உங்களது நடத்தையைப் பொறுத்தே அமைகிறது. உங்கள் எதிர்காலம் மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமானால் ஒழுக்கம் உயர்ந்ததாக இருக்கவேண்டும்.
* சத்தியம், தர்மம், தியாகம் ஆகியவற்றை பின்பற்றி நடப்பவனே உயர்ந்த மனிதன். உலகில் உள்ள உயிர்ப்படைப்புகள் அனைத்துமே சத்தியத்திலேயே பிறந்து சத்தியத்திலேயே மீண்டும் ஐக்கியமாகின்றன.
* தத்தளிக்கும் இந்த உலகத்தை மீண்டும் சத்தியவழியில் திருப்பவேண்டிய கடமை இளைஞர்களுக்கும்,  யுவதிகளுக்கும் இருக்கிறது. உலகத்தை சத்தியநெறியில் புனரமைக்க இளைஞர்களால் மட்டுமே முடியும்.
* ஒற்றுமையே நம் உயிர்நாடி. பல்புகள் வேறாக இருந்தாலும் அதில் பாயும் மின்சாரம் ஒன்று தானே. நீங்கள் அனைவரும் இனம் மொழியால் வேறுபட்டாலும் கடவுளின் பிள்ளைகள் தான்.
* பதவிக்கும் அதிகாரத்திற்கும் நம் மனம் ஏங்குகிறது. உண்மையான ஆனந்தம் சேவை செய்வதில் தான் இருக்கிறது. ஏழ்மையில் வாடும் மக்களுக்காக உங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய முற்படுங்கள்.
-சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement