E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
குன்றாத அன்பு வேண்டும்
டிசம்பர் 11,2007,
21:24  IST
எழுத்தின் அளவு:

* பெண்ணாசையிலும், பொன்னாசையிலும் மனத்தை அலையவிட்டு நாமத்தை மாத்திரம் நாவால் உச்சரிப்பதால் என்ன பலன்?

* தெரிந்தோ, தெரியாமலோ, தன்னறிவுடனோ, அறிவில்லாமலேயோ எந்த ஸ்திதியிலாகட்டும், ஒருவன் பகவந்நாமத்தை சொல்வானானால் அவனுக்கு அதன் பலன் கிட்டும். தானாகவே விரும்பி ஆற்றுக்குப் போய்க் குளிப்பவனுக்கும், வேறொருவனால் ஆற்றில் தள்ளப்படுபவனுக்கும் அல்லது தூங்கும்போது வேறொருவன் கொட்டிய தண்ணீரில் நனைபவனுக்கும் ஸ்நான பலன் ஒருங்கே ஏற்படுகிறது அல்லவா?

* பக்தி வேண்டும்; குன்றாத அன்பு வேண்டும்; அநித்யப் பொருள்களான பொன், புகழ், போகம் இவைகளிலுள்ள பற்றுதல் அகல வேண்டும்.

* பக்தியுடன் பகவந் நாமத்தைப் பாடு. அப்போது மலைபோலக் குவிந்திருக்கும் உனது பாவங்கள் எல்லாம் நெருப்புப் பொறி ஒன்றினால் மலைபோலக் குவிந்த பஞ்சுப்பொதிகள் எரிந்து சாம்பலாவதைப் போல நசித்துப் போய்விடும்.

* உலக வாழ்க்கையினர் செய்யும் பக்தி சாதனைகள் தற்காலிகமேயாம். அவைகள் நிலையான அடையாளங்களை உண்டாக்குவது இல்லை.

* சாந்தமான இடத்தில் உட்கார்ந்து கொண்டு பகவந்நாமத்தை மவுனமாக உச்சரிப்பதுதான் ஜபம். ஏகாக்ர சித்தத்துடன் ஒருவன் ஜபம் செய்வானானால் அவன் நிச்சயமாக ஈஸ்வரனை அடைவான்.

* கைகளினால் தாளம் போட்டுக்கொண்டே இனிமையான ஹரிநாம சங்கீர்த்தனம் செய்; இவ்வாறு செய்தால், உன் மனத்திலுள்ள தீய சிந்தனைகள் எல்லாம் அகன்றுவிடும்.

* அதைரியம், துவேஷம், பயம் இவைகள் குடி கொண்டிருக்கும் இடத்திற்கு ஈஸ்வரன் வருவதில்லை.

ராமகிருஷ்ணர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement