பாதுகாப்பு தரும் மகாசக்தி
மார்ச் 02,2010,
16:03  IST
எழுத்தின் அளவு:

* உலகம் நிலைபெற்று வாழ மகாசக்தியே அருள்செய்கிறாள். அந்த தேவியின் திருவடிகளே துணை என்று போற்றுவதில் தான் உண்மையான சுகமிருக்கிறது.
* தினமும் நெஞ்சத்தில் கவலையை வளர்த்து, உயிருக்கு அஞ்சிவாழ்வது அறியாமையாகும். இந்த உலகத்தை காத்து நிற்கும் மகாசக்தியின் திருவடிகளை பற்றிக்கொள்வதே அறிவுடையோர் செயலாகும்.
* உலகத்தைக் கட்டிக் காக்கும் இறைவன் நம்மையும் காப்பான் என்று நம்பி வாழ்ந்தால் நம் துயரெல்லாம் ஓடிப்போகும். இது வெற்று வார்த்தையல்ல.
* எண்ணிக்கைக்கு அடங்காமல் விண்வெளி எல்லாம் நட்சத்திர மண்டலங்களைப் படைத்த பெருஞ்சக்தியே மகாசக்தியாவாள். அவளே, நம்மைப் படைத்து இப்பூமியில் நடமாடவிட்டாள். அந்த நன்றிக்காக அந்த சக்தியைப் பக்தியுடன் போற்றித் துதிப்போம்.
* அனைத்து உயிர்களுக்கும் தாயாக இருக்கும் மகாசக்தியே! பொய்மை என்னைவிட்டு நீங்க வேண்டும். கள்ளங்கபடான எண்ணங்கள் மறைய வேண்டும். அன்பினாலும், பக்திப் பெருக்காலும் கண்களில் கண்ணீர் பெருக வேண்டும். உன் கருணை வெள்ளத்தில் சிறுநாயான என்னுடைய ஆசைகள் தணிய வேண்டும். என்னைப் பாதுகாத்து அருள வேண்டும்.
-பாரதியார்

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement