எதிர்விளைவு பற்றி கவலை வேண்டாம்
டிசம்பர் 11,2007,
21:26  IST
எழுத்தின் அளவு:

* நமது தீய எண்ணங்கள், தீய குணங்கள் இவற்றை வெளிவிடுதலே ரேசகம் (வெளிமூச்சு) ஆகும். நல்ல புனிதமான, தெய்வீக உணர்வுகளை உள் நிரப்பிக் கொள்ளுதலே (பூரகம்) ஆகும். அத்தகைய நல்லுணர்வுகளை மனதில் இருத்தி வைத்துக் கொள்ளுதலே கும்பகம் ஆகும். இதுவே ரேசகம், பூரகம், கும்பகம் ஆகியவற்றின் உட்பொருள் ஆகும்.

* இந்த உட்பொருள் எனக்குத் தேவையில்லை என்று நினைத்தால் வேறொன்று இருக்கிறது. 'ஸோ' என்ற ஒலியுடன் மூச்சை உள்ளிழுக்கிறோம். 'ஹம்' என்ற ஒலியுடன் வெளிவிடுகிறோம். எல்லோரும் இதைச் செய்கிறார்கள். விசேடமாக நீங்கள் செய்வதென்ன?

'ஸோஹம்' என்ற ஒலியில் தெய்வீகக் கோட்பாடு இருக்கிறது. 'ஸோ' என்றால் அது (தத்) கடவுள். 'ஹம்' என்பது நான். அதாவது, 'கடவுள் நானே', 'கடவுள் நானே' என்று கூறிக்கொள்கிறோம். ஒவ்வொரு நாளும் 21 ஆயிரத்து600 தடவைகள் 'நானே கடவுள்' என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருக்கிறோம்.

* மனிதப்பிறப்பு கர்மாவினால் இயங்குகிறது. தார்மீகமான செயல்களுக்காகவே இந்த உடல் நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நாம் செயல்படுத்துவதற்காகப் பிறந்திருக்கிறோம். நமக்கு இடப்பட்டிருக்கும் கடமையை ஒழுங்காகச் செய்தால் மனித சமுதாயம் நம்மைப் போற்றும். புகழும் வாழ்ந்த வாழ்வின் அடையாளம் காட்டும்.

* எந்தக் காரியத்திலும், அதன் பலன்களை எதிர்பார்த்தோ, எடைபோட்டோ, எதிர் விளைவுகள் என்ன என்றோ நினைத்து ஈடுபடாதீர்கள். அன்புடன் அழைத்தால், அன்புடன் மறுமொழி கிடைக்கும். அன்புதான் கடவுள். அன்பிலேயே வாழுங்கள்.

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement