சென்றதை நினைத்து வருந்தாதே
மார்ச் 12,2010,
12:46  IST
எழுத்தின் அளவு:

* கடவுளை நேசிப்பது என்பது கடவுளிலேயே தன்னைக் கரைத்துக் கொள்வதாகும். ஆன்மிக உணர்வில் ஆழ்ந்து செல்பவர்களுக்கு தியானநிலை நன்கு கைகூடும்.
* தியானம் பழகப்பழக அதன் பலன் உங்கள் பண்புகளில், நடத்தைகளில் வெளிபடத் தொடங்கும். மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக நீங்கள் அடையாளம் காணப்படுவீர்கள்.
* நேர ஒழுங்கு யோக சாதனத்திற்கு மிகவும் அவசியம். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் தியானப்பயிற்சியை மேற்கொள்வது நல்ல பலனளிக்கும்.
* தியானப் பயிற்சியின் போது, வெளிவிஷயங்களில் செல்லும் மனதை இழுத்துப் பிடித்து ஒருமுகப்படுத்தவேண்டும். உங்கள் சிந்தனை முழுவதும் இஷ்டதெய்வத்திடம் குவிய வேண்டும்.
* உண்மையான தியானம் என்பது 'நான் தியானம் செய்கிறேன்' என்ற நினைவையும் இழந்துவிடுவது தான். இந்த அனுபவத்தினால் வாழ்வின் ஒவ்வொரு கணமும் தியானப்பயிற்சி செய்வது போலாகிவிடும்.
* கடமையைச் செய். கடவுளை வழிபடு. செயலை இறைவனுக்கு அர்ப்பணி. சென்றதை நினைத்து வருந்தாதே. இதைப் பின்பற்றினால் உங்கள் வாழ்க்கையே ஒரு தியானமாகிவிடும்.
-சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement