மறந்தும் தீங்கு நினைக்காதீர்கள்
மார்ச் 19,2010,
14:10  IST
எழுத்தின் அளவு:

* சரியான நேரத்தில் காலம் கருதிச் செய்யும் உதவி அளவில் சிறியதாக இருந்தாலும் அதன் மதிப்பு இந்த பரந்த உலகத்தைக் காட்டிலும் பெரியதாகும்.
* பகைவரால் உண்டாகும் தீங்கினைவிட, ஒருவன் கொண்ட பொறாமை குணமே அவனுக்கு தீங்கு தரப் போதுமானது. பொறாமை குணம் கொண்டவனை அழிக்க வெளியில் வேறு பகை தேவையில்லை.
* மனம் வருந்தக்கூடிய கொடுஞ்சொற்களைக் கூறுவதைக் காட்டிலும் பயனற்ற சொற்களைப் பேசுதல் குற்றமாகும்.
* மறந்தும்கூட பிறருக்கு தீங்கு எண்ணாதீர்கள். திட்டமிட்டு பிறருக்குத் தீங்கு செய்பவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்கும்.
* தனக்கு உண்டாகும் துன்பத்தைப் பொறுத்துக் கொள்வதும், எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதுமே தவத்தின் இலக்கணமாகும்.
* மனதில் வஞ்சக எண்ணங்களை எண்ணிக் கொண்டு, ஒழுக்கம் கொண்டவன் போல் நடிப்பவனைக் கண்டு அவன் உள்ளத்தில் இருக்கும் இறைவன் சிரிப்பான்.
* குற்றமற்ற நன்மை பிறருக்கு கிடைக்கும் என்றால், அதற்காகப் பொய்யைக் கூட சொல்லலாம். அப்பொய்யும் உண்மையைப் போலவே ஆகும்.
-திருவள்ளுவர்

Advertisement
திருவள்ளுவர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement