நடப்பதெல்லாம் நன்மைக்கே!
மார்ச் 19,2010,
14:10  IST
எழுத்தின் அளவு:

* நீங்கள் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். அப்போது தான் வாழ்வில் துன்பம் நம்மை தாக்கும்போது, பாறைபோல எதிர்த்து நிற்க முடியும்.
* உலகில் மிகவும் இன்பம் தரும் செல்வம் இறையருளே. கண்ணை இமை காப்பதுபோல் இறையருள் நம்மைக் காப்பாற்றும்.
* மனிதனுக்குள் உண்டாகும் மிருகவுணர்ச்சியைக் களைந்துவிட்டால், தெய்வீக இயல்புகள் ஊற்றெடுக்கும்.
* உங்களுடைய குற்றங்குறைகளைக் கண்டுபிடியுங்கள். அடுத்தவர்களிடம் குணங்களை மட்டும் தேடுங்கள். அவர்களது குறைகளை பெரிதுபடுத்துதல் பாவம்.
* வேண்டாத பரபரப்பு, பயம், அறியாமையில் சிக்கிக்கொண்டு மனிதர்கள் தவிக்கிறார்கள். கடவுளை முழுமையாகச் சரணடைந்தால் நடப்பது எல்லாம் நன்மைக்கே என்ற தெளிவோடு உலகில் வாழமுடியும்.
* உண்மையும் பொய்யும் இவ்வுலகில் கலந்தே இருக்கின்றன. தயிரில் வெண்ணெயைப் பிரித்தெடுப்பதுபோல, உண்மையை மட்டும் தேர்ந்தெடுந்தெடுங்கள். உண்மையின் பக்கமே கடவுள் இருக்கிறார். உண்மை உங்களை என்றும் காப்பாற்றும்.
-சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement