மெய் மறக்கச் செய்யும் பேராசை
மார்ச் 19,2010,
14:11  IST
எழுத்தின் அளவு:

* பிறரை விடக் கூடுதலாக உலக வசதிகளைப் பெற வேண்டும் என்னும் எண்ணம் உங்களை மெய்மறதியில் ஆழ்த்தி வைத்திருக்கின்றது. நீங்கள் மண்ணறைகளைச் சென்றடையும் வரையில்.
திருக்குர்ஆன்(102:1,2)
* இறைவன் உங்களில் சிலருக்கு சிலரைவிட எதனைக் கொண்டு சிறப்பளித்திருக்கின்றானோ அதனை அடைய நீங்கள் பேராசை கொள்ளாதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்ததற்கேற்ப பங்கு உண்டு. மேலும் பெண்களுக்கு அவர்கள் சம்பாதித்ததற்கு ஏற்ப பங்கு உண்டு. இருப்பினும் இறைவனிடம் அவனுடைய அருளைக் கோரிய வண்ணம் இருங்கள்.
(திருக்குர்ஆன்4:32)
* (நபியே!) நாம் அவர்களில் பல்வேறு பிரிவினர்க்கு வழங்கியிருக்கும் உலக வாழ்க்கையின் சுகபோகங்களின் பக்கம் நீர் ஏறிட்டும் பார்க்காதீர். அவர்களைச் சோதிப்பதற்காகவே அவற்றை நாம் வழங்கியிருக்கின்றோம். மேலும் உம் இறைவனால் வழங்கப்பட்டுள்ள(ஆகுமான) வாழ்வாதாரம் தான் சிறந்ததும் நிலையானதுமாகும்.
(திருக்குர்ஆன்20:131)
(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)

Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement