மனவலிமையே உடல் வலிமை
மார்ச் 21,2010,
14:35  IST
எழுத்தின் அளவு:

* இடைவிடாத உழைப்பும், அன்பும், சேவை மனப்பான்மையும் கொண்டு வாழ்ந்தால் உலகம் என்றும் அழியாமல் வாழ்ந்திருக்கும்.
* அன்பினால் மட்டுமே உலகத்தில் உண்டாகும் துயரச்சம்பவங்களை மாற்றி ஆறுதல் அளிக்க முடியும்.
* உடம்பு வலிமை பெற வேண்டுமானால் மனம் வலிமை உடையதாக இருக்கவேண்டும்.
*அன்பிருக்குமிடத்தில் கோபம் என்பதற்கு சிறிதும் இடமில்லை.
* தெய்வபக்தி உண்மையானதாக இருந்தால் தைரியம் உண்டாகும். தைரியம் கொண்டவனே தெய்வத்திடம் பக்தி கொள்ளும் தகுதி பெற்றவன்.
* சோம்பேறித்தனம் பெரிய குற்றம். உலகில் பிச்சை எடுப்போரில் பெரும் பங்கு மோசமான சோம்பேறிகள் என்பது தான் உண்மை.
* நாம் பெறும் செல்வங்களுக்கெல்லாம் அறிவு தான் ஆதாரமாக இருக்கிறது. அறிவிருந்தால் எச்செயலையும் சாதிக்க முடியும்.
* தன்னலம் மறந்து சேவை செய். தெய்வத்தை நம்பு. உண்மையை மட்டும் பேசு. நியாயத்தைக் கடைபிடி. எல்லா இன்பங்களையும் நிச்சயமாகப் பெறுவாய்.
-பாரதியார்

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement