புனிதத்தின் ஆடை நல்லொழுக்கம்
டிசம்பர் 11,2007,
21:29  IST
எழுத்தின் அளவு:

* புத்தரைப்போல் கருணையும், பீஷ்மரைப்போல் தூய்மையும், அரிச்சந்திரனைப்போல் வாய்மையும், பீமனைப்போல் தைரியமும் கொள்ளுங்கள். உங்கள் கண்கள், அன்பாகப் பார்க்கட்டும். நாக்கு இனிமையாகப் பேசட்டும். கைகள் மிருதுவாகத் தொடட்டும். உங்கள் காதுகள் இறைவன் புகழால் நிறையட்டும். களைப்பின்றித் தொண்டாற்றுவதன் மூலம் வறுமையிலும், துயரங்களிலும் உள்ளவர்களைத் தேடிக் கண்டுபிடித்து உற்சாகப்படுத்தி ஆறுதலைத் தாருங்கள்.

* 'தான்' என்ற எண்ணத்தை விடும்போதுதான் புனிதம் தோன்றுகிறது. புனிதத்தின் எல்லை வீடுபேறாகும். பிரம்மச்சரியமே புனிதத்தின் திறவு கோலாகும். புனிதத்தின் விளக்கு, அண்டம் முழுவதும் அன்பு நிறைதல். புனிதத்தின் ஆடை நல்லொழுக்கம், புனிதத்தின் இலக்கு, சமப்பார்வை, இதன் அடிப்படை, சரியான நடத்தையாகும். நீங்கள் ஒரு புனிதராகுங்கள்.

* சுவாசத்தையும், வலிமையையும் உய்த்தறியும் உயிருக்கு வேகத்தையும் தருபவர் உள்நின்றியக்கும் இறைவனே. மறைந்திருந்தே உங்களுக்கு நேசக்கரங்களை நீட்டி உதவுகிறார். பிறரால் கேட்கப்படாமல் இருக்கும் அவர், உங்களது பேச்சைக் கேட்கிறார். பிறரால் அறிய முடியாத அவர், உங்களது எண்ணங்களை அறிந்திருக்கிறார்.

* சாதனை எனப்படும் ஆன்மிகப் பயிற்சிகள், வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் அகவாழ்க்கையை உள்ளாய்வு செய்யும் அகப் பார்வையையும், கலங்காத மனத்தையும் தரக்கூடியவை. நீங்கள் புதிய உள்ளத்தையும் பார்வையையும் பெறுவீர்கள். ஒரு ஆன்மிகப் பேரின்ப அலை உங்களை மோதிச்செல்லும். நீங்கள் உண்மை அல்லது மேலான பொருளின் காட்சியைப் பெற்று முழு வாழ்க்கையை எய்திவிடலாம்.

Advertisement
சிவானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement