வேண்டாத குணங்களை விலக்குங்கள்
ஏப்ரல் 09,2010,
09:54  IST
எழுத்தின் அளவு:

* ஒரு இழைநூல் கொண்டு எறும்பைக்கூட கட்ட முடியாது. நூற்றுக்கணக்கான இழைகளைத் திரித்து இணைத்தால் யானையைக் கூட கட்டி இழுக்க முடியும். ஒற்றுமையின் பயனால் உலகில் பல நன்மைகள் பெற்று வாழலாம்.
* கூரான கோடரியால் சந்தனமரத்தை வெட்டும்போது சந்தனமரம் வருத்தம் கொள்வதில்லை. மாறாக தன் வாசனையைக் கோடரிக்குத் தந்து மணம் வீசுகிறது. அதுபோல, நல்லவர்கள் பிறர் தீங்கிழைத்தாலும் கூட தங்களால் முடிந்த நன்மைகளை மட்டுமே உலகிற்குத் தந்து பயனுள்ளவர்களாக வாழ்கிறார்கள்.
* பற்களுக்கிடையே உழன்றாலும் நாக்கு அதில் கடிபடாமல் தப்பித்துக் கொண்டு செயல்படுகிறது. பிழைப்புக்காக தீயவர்களோடு பழக நேர்ந்தாலும், கேடு நேராதபடி ஒதுங்கிக் கொண்டு வாழ்வதே நல்ல குணமாகும்.
* சிற்பியின் கைவண்ணத்தால் கல் உயிர் பெற்று சிலையாகிறது. அதுபோல உங்களை நீங்களே செதுக்கிக் கொள்ளப் பழகுங்கள். வேண்டாத பகுதியை செதுக்கும்போது, பாறையில் உருவம் உண்டாவதுபோல வேண்டாத குணங் களை விலக்கினால் வாழ்வு பொருள் உடையதாகும்.
-சாய்பாபா


Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement