பொறாமை கொள்ளக்கூடாது
ஏப்ரல் 09,2010,
09:58  IST
எழுத்தின் அளவு:

நபிகள் நாயகம்(ஸல்) நவின்றார்கள்:
* நெருப்பு விறகை அழித்து விடுவது போல் பொறாமை நற்செயல்களை அழித்து விடுகின்றது.
(நூல்: அபூதாவூத்)
* இருவரைத் தவிர வேறு எவர் மீதும் பொறாமை கொள்ளக் கூடாது. இறைவனால் ஞானம் வழங்கப்பெற்று, அதன் வழிநடந்து அதனைப் பிறருக்கும் கற்றுத் தருபவர். இறைவனால் செல்வம் வழங்கப் பெற்று அதனை நல்வழியில் செலவழிப்பவர்.
(நூல்: புகாரி, முஸ்லிம்)
இறைவன் கூறுகின்றான்:
* இவர்கள் இறைவன் தன் அருளினால், மக்களுக்கு வழங்கியிருப்பதைக் கண்டு அவர்கள் மீது பொறாமை கொள்கின்றார்களா?
(திருக்குர்ஆன் 4:54)
* (நபியே!) நாம் அவர்களில் பல்வேறு பிரிவினர்க்கு வழங்கியிருக்கும் உலக வாழ்க்கையின் சுகபோகங்களின் பக்கம் நீர் ஏறிட்டும் பார்க்காதீர். அவர்களைச் சோதிப்பதற்காகவே அவற்றை நாம் வழங்கியிருக்கின்றோம்.
(திருக்குர்ஆன் 20:131)
* (இறைவா!) பொறாமைக்காரர்கள் பொறாமை கொள்ளும்போது செய்யும் தீங்கிலிருந்து (பாதுகாப்பு தேடுகின்றேன் எனப் பிரார்த்தனை புரியுங்கள்)
(திருக்குர்ஆன் 113:5)
(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)


Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement