உழைப்பதில் தான் சுகம்
ஏப்ரல் 13,2010,
13:58  IST
எழுத்தின் அளவு:

* தெய்வத்தை முழுமையாக நம்புங்கள். உண்மையைப் பேசுங்கள். நியாயமான செயல்களைச் செய்யுங்கள். உலகில் உள்ள எல்லா இன்பங்களையும் பெற்று மகிழுங்கள்.
* உள்ளத்தில் எழும் தீய எண்ணமானது வெளியில் உண்டாகும் புறப்பகைவனைக் காட்டிலும் கொடியதாகும்.
* காலம் மிகவும் அருமையானது. பொழுதினை வீணாகக் கழிப்பது கூடாது. நம் முன்னேற்றமும், வளர்ச்சியும் காலத்தைப் பயன்படுத்திக் கொள்வதால் உண்டாகிறது.
* ஒருவன் தனக்குத் தானே நட்புள்ளவனாகத் திகழ வேண்டும். தன்னைத் தான் நேசிக்கக் கற்றுக் கொள்ளும்போது உலகம் முழுவதும் அவனுக்கு நட்பாகி விடும்.
* நம்முடைய இஷ்டப்படி உலகம் நடக்கவில்லை. தெய்வத்தின் இஷ்டப்படி நடக்கிறது என்ற உண்மையை உணருங்கள்.
* மனவுறுதி இல்லாதவனின் உள்ளம் குழம்பிய கடலுக்கு நிகரானது. மனவுறுதி இல்லாவிட்டால் உலகில் எந்த செயலையும் சாதிக்க முடியாது.
* உழைப்பதில் தான் சுகம் இருக்கிறது. உழைத்து பெறும் செல்வமே நிலைத்திருக்கும்.
-பாரதியார்


Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement