செயல்களே மதிப்பு தரும்
ஏப்ரல் 13,2010,
13:59  IST
எழுத்தின் அளவு:

* நாம் இந்த உலகத்திற்கு ஒன்றும் கொண்டு வந்ததில்லை. இந்த உலகத்திலிருந்து ஒன்றையும் கொண்டு போகப் போவதுமில்லை.
* சொந்த நாட்டையும் வீட்டையும் தவிர வேறிடத்தில் மகிமையடையாத தீர்க்கதரிசி இல்லை.
* மனிதன் மதிப்பிடுவது செயல்களாலேயன்றி வெறும் நம்பிக்கையினால் மட்டுமல்ல.
* கபடு செய்கிறவர் என் வீட்டினுள்ளே இருப்பதில்லை. பொய் சொல்கிறவர் என் கண்முன் நிலைப்பதில்லை.
* நாம் நடப்பது நம்பிக்கையினால் தான்; பார்வையினால் அல்ல.
* நண்பன் புண்படுத்தும் காயங்கள் உள்ளூரப் பற்றுதல் உள்ளவை. ஆனால், பகையாளி ஒருவன் வாரி வழங்கும் முத்தங்களோ உள்ளூரப் பித்தலாட்டமானவை.
* நன்மை செய்வதில் சோர்வுற வேண்டாம்.
* கடவுளின் சிருஷ்டி ஒவ்வொன்றுமே நல்லது தான். நன்றியறிதலுடன் பெற்றுக் கொண்டால் எதையும் தள்ள வேண்டியதில்லை.
* மதுபானப் பிரியர்களோடும், மீதூண் விரும்பும் மாமிசப் பிரியர்களோடும் சகவாசம் வேண்டாம்.
-பைபிள் பொன்மொழிகள்


Advertisement
பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement