இறைவன் அருளியதை உண்ணுங்கள்
ஏப்ரல் 18,2010,
13:21  IST
எழுத்தின் அளவு:

* (சத்தியத்தின் விரோதிக்கு) அதிகாரம் கிடைத்து விட்டால், அவனுடைய முயற்சிகள் எல்லாம் பூமியில் குழப்பத்தைப் பரப்புவதற்காகவும், வேளாண்மையையும், மனித
இனத்தையும் அழிப்பதற்காகவுமே இருக்கும். ஆனால், இறைவன் குழப்பத்தை விரும்புவதில்லை.
திருக்குர்ஆன் (2:204-205)
* இறைவன் அருளிய உணவை உண்ணுங்கள்; பருகுங்கள்; ஆனால், பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரியாதீர்கள்.
(திருக்குர்ஆன் 2:60)
* குழப்பம் செய்வது கொலையை விடக் கொடியதாகும்.
(திருக்குர்ஆன் 2:217)
* இறைவன் உனக்கு வழங்கியுள்ள செல்வத்தின் மூலம் மறுமையின் வீட்டைப் பெற அக்கறை கொள்; மேலும் இம்மையிலும் உனது பங்கை மறந்து விடாதே! மேலும், இறைவன் உனக்கு உபகாரம் செய்திருப்பது போல் நீயும் உபகாரம் செய். மேலும், பூமியில் அராஜகம் விளைவிக்க முயற்சி செய்யாதே!
(திருக்குர்ஆன் 28:77)
* இறைவா! விஷமம் செய்யும் இந்த மக்களுக்கு எதிராக நீ எனக்கு உதவி புரிவாயாக! (என நீங்கள் பிரார்த்தனை புரியுங்கள்)
(திருக்குர்ஆன் 29:30)
(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)


Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement