உண்மை உயர்வு தரும்
ஏப்ரல் 25,2010,
12:52  IST
எழுத்தின் அளவு:

* எந்தநிலையிலும் உண்மையையே பேசுதல், அன்பு ,அகிம்சை , எல்லா உயிர்களையும் நேசித்தல் ஆகிய நற்குணங்களை பின்பற்றுபவன் உயர்ந்த தெய்வீக நிலையை அடைவான்.
* கடவுள் ஒரு சர்வாதிகாரியோ, உயிர்களை இம்சை செய்யும் கொடுங்கோல் மன்னனோ அல்ல. அவர் நம்மீது அன்பு கொண்ட தந்தையாக, தாயாக, தோழனாக இருந்து வழிகாட்டுகிறார்.
* எண்ணத்திலும், பேச்சிலும், செயலிலும் தூய்மையைக் கடைபிடிக்கத் தொடங்கினால், நம் அந்தரங்க நோக்கமும், அகவுணர்வும் கூட பரிசுத்தமாகிவிடும்.
* எவன் ஒருவன் தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் மனம் மொழி மெய்களால் வாய்மையைக் கடைபிடிக்கிறானோ அவனது வாய்மொழிகள் அனைத்தும் பலிக்கத் தொடங்கி விடும்.
* சத்தியம் எங்கிருக்கிறதோ அந்த இடத்தில் எல்லா நற்குணங்களும் தானாகவே வந்து சேரும். சத்தியம் பேசுபவன் மனதில் எப்போதும் மகிழ்ச்சி குடிகொண்டிருக்கும்.
* தன்னடக்கம் உள்ளவன் இருக்குமிடமே தவச்சாலை. அவன் தன்னால் முடிந்த நன்மைகளை எல்லா உயிர்களுக்கும் செய்வதிலேயே இன்பம் காண்பான்.
-சிவானந்தர்


Advertisement
சிவானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement