சாந்தகுணத்துடன் பழகுங்கள்
ஏப்ரல் 25,2010,
12:53  IST
எழுத்தின் அளவு:

* உண்மையைப் பேசுங்கள். உண்மையான அனுபவங்களை பற்றி மட்டுமே பிறரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். உண்மைக்குப் புறம்பாக எதையும் திரித்தோ, மாற்றியோ கூறுவது நல்லதல்ல.
* வீட்டுக்குழந்தைகளுடன் சேர்ந்து பஜனை செய்யுங்கள். இனிமையான சொற்களைப் பேசுங்கள். அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். நீங்கள் இருக்கும் இடத்திற்கு கடவுளே நாடி வந்துவிடுவார். அப்போது நீங்கள் குடியிருக்கும் இல்லமே ஆலயமாகி விடும்.
* பிறப்பிலும், இறப்பிலும் அனைவரும் சமமே. ஆண்டவனுக்கு உயர்வு தாழ்வு இல்லை. இடையில் தான் வேறுபாடுகள் முளைக்கின்றன. உலகை ஆளும் அரசனும், உலகத்தையே துறந்த ஆண்டியும் ஆண்டவன் முன் சமமானவர்களே.
* அமைதியானவர்களாக, கோபம் என்பதே இல்லாத சாந்த குணம் கொண்டவர்களாக இருக்கப் பழகுங்கள். மனதை நிலவுபோல குளிர்ச்சியுள்ளதாக ஆக்கிக் கொள்ளுங்கள்.
* பொறுமை, புலனடக்கம், அமைதி, நிதானம் போன்ற தெய்வீக குணமுடையவர்கள் தங்களுக்கு மட்டுமின்றி இந்த சமுதாயத்திற்கும் நன்மை செய்பவர்களாக இருக்கிறார்கள்.
-சாய்பாபா


Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement