வீணானவற்றை விட்டு விலகுங்கள்
ஏப்ரல் 25,2010,
12:54  IST
எழுத்தின் அளவு:

* திண்ணமாக, இறைநம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையவர்கள் எனில், தங்களுடைய தொழுகையில் பயபக்தியை மேற்கொள்கின்றனர். மேலும், வீணானவற்றை விட்டு விலகியிருக்கின்றார்கள்.
(திருக்குர்ஆன்23: 1-3)
* (இறைவனின் உண்மையான அடியார்கள் யாரெனில்) அவர்கள் பொய்மைக்கு சாட்சியாக இருப்பதில்லை. அவர்கள் ஏதேனும் வீணானவற்றின் அருகில் செல்ல நேர்ந்தால், கண்ணியமானவர்களாய்க் கடந்து சென்று
விடுவார்கள்.
(திருக்குர்ஆன் 25:72)
* அவர்கள் வீணானவற்றைச் செவியுற்றால் அவற்றை விட்டு விலகி விடுகின்றார்கள். மேலும் கூறுகின்றார்கள்: ''எங்களுடைய செயல் எங்களுக்கு, உங்களுடைய செயல் உங்களுக்கு! உங்களுக்கு சாந்தி உண்டாகுக! நாங்கள்
அறிவீனர்களின் நடத்தையை மேற்கொள்ள விரும்புவதில்லை''.
(திருக்குர்ஆன் 28:55)
- (வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)


Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement