மனதை சுத்தமா செய்
அக்டோபர் 10,2011,
08:10  IST
எழுத்தின் அளவு:

செம்பைத் தேய்த்து வெளுப்பாக்கிவிட்டால் மறுநாளும் அழுக்காகத்தானே செய்கிறது. மறுபடி தேய்க்க வேண்டும். இதேபோல் நாம் சித்தத்தையும் விடாமல் அனுஷ்டானத்தால் சுத்தம் செய்துகொண்டு இருக்க வேண்டும்.பகவான் என்று ஒருவன் சர்வ சாட்சியாகவும் சர்வ சக்தனாகவும் இருந்துகொண்டு நம் கர்மங்களுக்குப் பலன் தருகிறான் என்ற பய உணர்ச்சிதான், யுக யுகாந்திரமாக மனிதனைத் தர்ம மார்க்கத்தில் நிறுவும் ஊன்றுகோலாக இருந்து வந்திருக்கிறது.தேவர்களுக்கு நம்மைப் போல் மூப்பு மரணம் இல்லை. அவர்களுக்கு நம்மைவிட சக்தி அதிகம். இருந்தாலும் அவர்கள் நம்மிடமிருந்தே ஆகுதி பெறுமாறு பகவான் வைத்திருக்கிறார்.அம்பாளை விட மங்கள வஸ்து இல்லை. 'ஸர்வ மங்கள மாங்கல்யே' என்று அம்பாளைச் சொல்வார்கள். அவர்களுடன் சேர்ந்திருப்பதாலே பரமேஸ்வரனும் மங்கள ஸ்வரூபியாகிறார். மங்களமே வடிவான அம்பிகை மகா சுமங்கலி; அவளுடைய சவுமாங்கல்யத்திற்கு எப்படிப் பங்கம் உண்டாக முடியும்? இதனால்தான் ஆலகால விஷம் சாப்பிட்டும்கூட பரமேஸ்வரன் சவுக்கியமாகவே இருக்கிறார். ஆசார்யாள் (ஸ்ரீ ஆதிசங்கரர்) சவுந்தர்யலஹரியில் இப்படித்தான் கூறுகிறார்.நான்கு பேருக்கு, இரண்டுபேருக்கு அம்மா அப்பாவாகப் பலர் இருக்கிறார்கள். எல்லோருக்கும் அம்மா அப்பா யார்? பார்வதி பரமேஸ்வரர்கள்தாம் என்பதை உண்மையாகப் புரிந்துகொண்டுவிட்டால் நாம் எல்லோரும் அவர்களுடைய குழந்தைகள், சகோதர சகோதரிகள் என்கிற எண்ணம் வந்துவிடும்.


Advertisement
காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement