கருணை நிறைந்தவராயிருங்கள்
டிசம்பர் 11,2007,
21:37  IST
எழுத்தின் அளவு:

இங்கே இறைவன் ஒருவன்தான். இறவாமை கல்விக்குத்தான். மனிதன் இனங்கள் பல கண்டாலும் இறப்பில் எல்லோரும் ஒன்றே.

இவர்கள் நிறத்தில் வெளுத்திருந்தாலும் மனத்தே கருத்தவர்கள். வெளியே வெளிச்சம், உள்ளே இருட்டு. இத்தகு மனிதர்கள் வாழும் இந்த உலகத்தைத் திருத்தி இவர்களுக்கு மண்ணிலே விண்ணைக்காட்ட மகேசன் என்னைப் படைத்தான்.

தன்னை எத்தனை நிந்தித்துப் பேசியபோதும் இறைவன் இவர்களிடம் தயவாகவே உள்ளான். நான் சூது பேசவில்லை. இவர்களை எனது சுற்றத்தாராகவே எண்ணுகிறேன். இவர்கள் தங்கள் வெற்றான விவாதங்களை விட்டு அந்த மேம்பட்டவனின் அருளைப் போற்றுதல் வேண்டும். காலத்தை வீணில் கழித்திடல் ஆகாது.

தாழ்ந்த குலம், உயர்ந்த குலம் என்று தரம் பிரித்து பார்க்கின்றோம். நரை, மரணம், மூப்பு அறியாத நல்லுடம்பைப் பெற்றவரல்லவா நற்குலத்தவர் ஆவார்.

கருணை நிறைந்தவராயிருங்கள். அது உங்கள் உள்ளத்தில் ஊற்றாய் பொங்கட்டும்; உடம்பெங்கும் வழிந்தோடட்டும். அடுத்தவர் துன்பத்தைக் காணச் சகியாதவரே கருணைமிக்கவர். அடுத்தவர் படும் இன்னலைத் துடைத்தெறிவதே கருணை உள்ளம்.

நான் இறவாத உடம்பு கேட்டேன். இறைவன் எனக்கு உவப்புடன் அளித்தான்.

தன்னைப் போலவே பிறரையும் பாவிக்கின்ற மனம் இவர்களிடம் இல்லை. இவர்கள் சக மனிதர்களின் மனதைத் தின்கிறார்கள். சாத்விகமான விலங்குகளின் உடம்பைத் தின்கிறார்கள். இந்தப் புலால் நெறி கண்டல்லவோ என் உள்ளம் வெதும்புகிறது. இவர்களது கொலைவெறி கண்டல்லவோ நான் அஞ்சுகின்றேன்.

Advertisement
வள்ளலார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement