எதற்கும் ஒரு காலம் உண்டு
மே 21,2010,
14:05  IST
எழுத்தின் அளவு:

* ஒவ்வொன்றிற்கும் ஒரு பருவம் உண்டு. வானின் கீழ் உள்ள ஒவ்வொரு நோக்கிற்கும் ஒரு காலம் உண்டு. பிறப்பதற்கு ஒரு காலமும் இறப்பதற்கு ஒரு காலமும், விதைப்பதற்கு ஒரு காலமும், விதைத்தலின் விளைச்சலைப் பறிப்பதற்கு ஒரு காலமும் உண்டு. அழுவதற்கு ஒரு காலமும், சிரிப்பதற்கு ஒரு காலமும் உண்டு. ஓலத்திற்கு ஒரு காலமும், நடனத்திற்கு ஒரு காலமும் உண்டு.
* எதைச் சாப்பிடுவோம். எதைக் குடிப்போம். எதை உடுத்திக் கொள்வோம் என்று சிந்திக்க வேண்டாம். ஏனெனில், இவைகளை எல்லாம் அறிவிலிகளே தேடியலைகிறார்கள்.
* எதெது உண்மையோ, எதெது யோக்கியமோ, எததெது நியாயமோ, எதெது தூய்மையோ, எதெது அன்பிற்குரியதோ, எதெது நற்கீர்த்தியோ, எதெது பண்பொழுக்கமோ, எதெது போற்றுதலுக்குரியதோ அவற்றைச் சிந்தித்துக் கொண்டிருங்கள்.
* சச்சரவிலிருந்து விலகி நிற்பது மனிதனுக்கு மேன்மை தரும். ஆனால் ஒவ்வொரு முட்டாளும் எந்தச் சண்டையிலும் தலையிட்டுக் கொண்டேயிருப்பான்.
-பைபிள் பொன்மொழிகள்


Advertisement
பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement