நம்பிக்கையே வாழ்க்கை
டிசம்பர் 11,2007,
21:43  IST
எழுத்தின் அளவு:

எந்த ஒரு பிரச்னையிலும் சரியான உண்மை யாருக்குத் தெரியும்? ஒவ்வொருவரும் தனக்குத் தெரிந்ததுபோல் பேசுகிறார்கள். உண்மையில் அது யாருக்கும் தெரியாது. பேருண்மை வெளிப்படுகிற நாளில் தங்களிடமிருந்தது பெருமளவு அறியாமையும், தவறான விளக்கங்களும் என்பதை அவர்கள் அறிவார்கள். எனவே, அவசரப்பட்டு எவ்வித தீர்ப்பும் கூறாமல் அமைதியாயிருப்பதுநல்லது. அதுவே எல்லாவற்றைக் காட்டிலும் பாதுகாப்பானது. தங்கள் நம்பிக்கையை நிலையாய் வைத்திருப்பவர்கள் பாதுகாப்புடன் இருக்கிறார்கள்.

நம்பிக்கை எளியது, கள்ளமற்றது. தெய்வத்திடம் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இப்படிச் சொல்லிக் கொள்ளுங்கள்: 'உமது திருவுளப்படியே ஆகுக. என்னுடைய வாழ்வு உம்முடைய பாதுகாப்பில் இருப்பதால் நான் அஞ்சுவதற்கு எதுவும் இல்லை. நான் உம்முடையவன்' என்று.

மனித இனத்துக்குத் தேவைப்படும் நேசம், கொடைப்பண்பு, சேவை போன்ற நல்ல விஷயங்கள் பல உங்களிடம் இருக்கின்றன. ஆனால் இவற்றின் பின்னணியில் இருக்கிறது தன்னுணர்வு. அது 'நான்' என்கிற அகங்காரம். நியாயங்களின் பின்னே ஒரு நீசத்தனமாக, புனிதங்களின் பின்னே ஒரு மாசுப்படலமாக அது மறைந்து கிடக்கிறது. நீங்கள் நீக்கப்பட வேண்டியவற்றை அடக்கி வைக்கிறீர்கள்; மறைத்து வைக்கிறீர்கள். ஆனால், அவற்றை நீக்கவில்லை.

நீங்கள் அகந்தையைத் தொலைத்தாலன்றி இறைவனை எப்படி அடைவீர்கள்? இறைவனுடன் எப்படி ஐக்கியமாவீர்கள்? உங்கள் இடர்பாடுகளுக்குக் காரணம் அகந்தை அல்லவா? உங்கள் இதயத்தின் மோனவெளியில் பிரபுவின் (இறைவன்) கருணை பிரகாசமாயிருப்பதைக் காணுங்கள்.

Advertisement
ஸ்ரீ அன்னை ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement