Advertisement
இனிமையாக நடந்து கொள்ளுங்கள்
மே 25,2010,
16:05  IST

* "சற்று பூமியில் சுற்றித் திரிந்து குற்றவாளிகளின் கதி என்னவாயிற்று என்பதைப் பாருங்கள்''
* கொடுமைக்காரர்கள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை.
(திருக்குர்ஆன் 28:37)
* இறைவன் அவர்களுக்கு அக்கிரமம் புரிபவனாக இருந்ததில்லை. ஆனால், தமக்குத்தாமே அவர்கள் அக்கிரமம் புரிந்து கொண்டிருந்தார்கள். இறுதியில் எவர்கள் தீவினைகள் செய்து வந்தார்களோ அவர்களுடைய இறுதி முடிவு மிகவும் தீயதாகிவிட்டது.
* இந்த அக்கிரமக்காரர்களின் செயல்களை இறைவன் கவனிக்காமல் இருக்கின்றான் என்று (நபியே!) நீர் கருதவேண்டாம். அவர்களை அவன் விட்டு வைத்திருப்பது ஒரு குறிப்பிட்ட நாள் வரைக்கும் தான்! அந்நாளில் அவர்களின் விழிகள் மருளும்; அவர்கள் தம் தலைகளை மேலே உயர்த்திக் கொண்டு ஓடுவார்கள். அவர்களின் பார்வை நிலைகுத்தியிருக்கும். மேலும், அவர்களுடைய இதயங்கள் சூனியமாகி விட்டிருக்கும். வேதனை வரக்கூடிய அந்நாளைப் பற்றி மக்களுக்கு எச்சரிக்கை செய்வீராக.
(வேத வரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)


குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
Advertisement