வடிவேலும் மயிலும் துணை
மே 25,2010,
16:05  IST
எழுத்தின் அளவு:

* மயில் மீது வடிவேலுடன் வரும் முருகப்பெருமானே! உன் பக்தர்கள் மனம் குளிரும் வகையில் பொன்னும், பொருளும், புகழ் மிக்க வாழ்வும், திறமையும் தந்தருள். அசுரர்களிடமிருந்து தேவர்களைக் காத்தவனே! முடிவு என்பதே இல்லாத வேத வடிவமே! எங்கள் கவலைகளைப் போக்கி ஆனந்த வாழ்வு கொடு.
* தேவலோகம் வாழ்வு பெற வந்த சிவகுமரா! உன் பாதங்களில் சரணடைகிறோம். எங்கள் நோய்களைப் போக்கிடும் வண்ணம் ஒளி பொருந்திய சுடர் வேலினைத் தாங்கி வா. அறிவென்னும் கோயிலிலே! நாங்கள் புதுவாழ்வு பெற எங்கள் இல்லம் வந்து அருள் செய்.
* பரமசிவனின் பாலகனே! எங்கள் மனதில் கொலுவிருக்கும் குகனே! வாழ்வில் வளம் பெற தொழிலில் மேன்மையைத் தந்தருள். தேவர்கள் வாழ்வு பெற சூரனுடன் போர் புரிந்த முருகப்பெருமானே! உன் திருவடிகளைச் சரணடைகிறோம்.
* வில்லினை ஒத்திருக்கும் உன் புருவத்தை வளைத்ததால் மகேந்திரகிரி என்னும் மலையே நொறுங்கிப் போனது. வீரம் மிக்க அந்தப் பார்வையால் எங்களைக் காத்திடு. வேலும் மயிலும் எந்த நேரத்திலும் துணைநிற்க அருள்செய்.
-பாரதியார்


Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement