கடவுள் வழி நடத்துவார்
மே 25,2010,
16:05  IST
எழுத்தின் அளவு:

பிரசித்தி பெற்ற பாடகர் சாங்க்கியுடன் அவருடைய மகன் நடந்து சென்றான். அவனுக்கு தான் அணிந்திருந்த கோட்டின் மேல் அளவில்லாத ஆசை. இரண்டு கைகளையும் கோட் பைக்குள் திணித்துக் கொண்டு பெருமையாக நடந்தான்.
தகப்பனார் சொன்னார், ""மகனே! மழை பெய்து ஈரமாய் இருக்கிறது. உன் கால்கள் சறுக்கலாம். என் கைகளைப் பிடித்துக் கொள்'' என்றார். ஆனால், சிறுவனோ கோட் பையிலிருந்து தன் கைகளை எடுக்கவில்லை. ஸ்டைலாக நடந்து வந்தான்.
திடீரென்று சரளைக் கற்கள் சிறுவனின் கால்களை வாரிவிட்டன. தடுமாறிய அவன் கீழே விழுந்ததால் பலத்த அடிபட்டான். முழங்காலில் ரத்தம் பீறிட்டது. அன்று அவன் ஒரு அருமையான பாடத்தைக் கற்றுக் கொண்டான். பலமுள்ள தன் தகப்பனின் உறுதியான கரங்களைப் பற்றிப் பிடித்து நடக்க தீர்மானித்தான்.
கர்த்தர் நம்மை நடத்துகிறார். நித்தமும் நம்மை நடத்துகிறவர்.(ஏசா.58:11) மரணப் பரியந்தமும் நடத்துகிறவர்(சங்:48:14) ஜீவ தண்ணீருள்ள ஊற்றுகள் அண்டைக்கு அவருடைய கரங்களைப் பிடித்து நடப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்!
-பைபிள் பொன்மொழிகள்


Advertisement
பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement