வெறுப்பும் இல்லை கோபமும் இல்லை
டிசம்பர் 12,2007,
18:33  IST
எழுத்தின் அளவு:

* யாரேனும் ஒருவர் உண்மையாகவே கடவுளை எங்கே காணலாம் என்று கேட்டால், விடை சொல்வதை தவிர்க்காதே. உன் இதயத்திலிருந்து எழுந்து நாவிற்கு வரும் விடையைச் சொல்லி விடு. புட்டபர்த்திக்கு அனுப்பு. உன் ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ள அழைப்பு விடு.

* புட்டபர்த்திக்கோ, வேறு புனிதத்தலங்களுக்கோ வரும்போது உங்கள் ''கார்'' சக்தி ஏற்றப்படுகிறது. உங்கள் சாதனா முயற்சியில் சக்தி ஏற்றிக் கொள்ளுங்கள். வீட்டுக்கு வந்த பிறகு ''காரை'' வேலையின்றிச் சும்மா வைத்திராதீர்கள். தொடர்ந்து அது இயங்கட்டும். பேட்டரி தானே சக்தி ஏற்றிக் கொள்ளும். நீங்களும் உங்கள் ''சத்சங்கம்'', ''சத் பிரவர்த்தனை'', ''பஜனை'', ''நாமஸ்மரணை'' ஆகியவற்றைத் தொடராவிட்டால் வீணாகி விடும்.

* தியானத்துக்கேற்ற நேரம் பிரம்ம முகூர்த்தம் (காலை 3 முதல் 6 மணி வரை). ஒருவர் அதே நேரத்தில், அதே கால அளவில் ஒவ்வொரு நாளும் தியானம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லது.

* நாடுகள் பல, பூமி ஒன்று; அணிகள் பல, ஆணிப்பொன் ஒன்று; உயிரினங்கள் பல, மூச்சுக்காற்று ஒன்று.

* நான் அன்புக் கண்ணாடி அணிகிறேன். விரும்பினாலும் என்னால் எவரையும் வெறுக்க இயலாது. என்னிடம் வெறுப்பும், வெஞ்சினமும் இல்லை. எச்சரிக்கவும், திருத்தவும் நான் சீறலாம். ஆனால் எப்போதும் வெறுப்பதில்லை. நான் ஆனந்தம். ஆனந்தம் மட்டுமே. நான் ஞானம், ஆனந்தம், சாந்தி! அது என் இயற்கை.

* எவர் முயன்றாலும், எவ்வளவு காலம் முயன்றாலும், எந்த வழிகளில் முயன்றாலும் என் சக்தி, என் ஆற்றல், என் மர்மம் புரிந்து கொள்ள முடியாதவை

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement