எதுவும் அளவுடன் இருக்கட்டும்!
ஜூன் 04,2010,
17:06  IST
எழுத்தின் அளவு:

* தியாகம் என்பது வேறு; ஒன்றை வெறுப்பது என்பது வேறு. ஒரு பொருளின் முழுமதிப்பையும் உணர்ந்து அது கிடைத்தும் எனக்கு வேண்டாம் என்று சொல்வது தியாகம்.
* தனக்கு கிடைக்காத ஒன்றை நினைத்து வேதனைப்படுவதால் வெறுப்பே உண்டாகும். வெறுப்பு உண்டானால் வாழ்வில் தளர்ச்சியும், சலிப்பும் உண்டாகிவிடும். மாறாக, மனமுதிர்ச்சியால் உண்டாகும் தியாகமோ மிக உன்னதமானது.
* சத்தியத்தையும், தர்மத்தையும் போதிக்கும் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் நமக்கு அறநெறிகளையும், வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினைகளை போதிக்கின்றன.
* இறைவனை நமக்கு பிடித்தமான உறவுமுறை கொண்டு வழிபடலாம். குழந்தையாக, தாயாக, தோழனாக, காதலனாக, எஜமானாக என்று எப்படி வேண்டுமானாலும் கருதி வழிபாடு செய்ய முடியும். விருப்பமான முறையில் வழிபடும் சுதந்திரம் நமக்கு இருக்கிறது.
* எதுவும் அளவோடு இருப்பது தான் நன்மையைத் தரும். ஆனால், நாமோ அளவில்லாத ஆசைகளை மனதில் வளர்த்துக் கொண்டு அல்லல்படுகிறோம். ஆசை என்னும் சுமை அதிகமானால் வாழ்க்கைப் பயணத்தில் சுகம் குறைந்து விடும்.
-சாய்பாபா


Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement