எங்கள் வாழ்வு உனது கையில்!
ஜூன் 06,2010,
16:06  IST
எழுத்தின் அளவு:

* விண்ணையும், மண்ணையும் காக்கும் சக்திதேவியே! வீரத்தின் விளைநிலமே! உன்னையே எங்கள் கண்ணும் கருத்துமாய் எண்ணி வாழ்கிறோம். அன்புடன் கசிந்துருகி வழிபாடும் செய்கிறோம். எங்கள் மீது உன் அருட்கண்ணை நோக்கு.
* எங்களுக்கு நல்ல வழியில் செல்வத்தையும், அந்த நிதியைக் காக்கும் திறமையையும் தர வேண்டுமென பணிந்து கேட்கிறோம். உன் புகழைப் பாடுவதில் இருந்து என்றும் ஓய மாட்டோம். எங்களைப் பாதுகாப்பது உன் பொறுப்பு.
* காளீஸ்வரியே! வல்லமை மிக்க சாமுண்டித்தாயே! நீ எங்களை துன்பத்தில் இருந்து பாதுகாத்து, விரும்பிய வரத்தை அருள வேண்டும். அம்மா! உன்னுடைய தாமரைப் பாதத்தில் விழுந்து அபயம் கேட்கிறோம். அதை தர உனக்கு விருப்பமில்லாவிட்டால் எங்கள் உயிரை எடுத்துக் கொள்.
* உன்னிடம் கேட்கும் வரங்களை இன்றே எங்களுக்கு அருள வேண்டும். எங்கள் வாழ்வுக்கு தடையாய் இருக்கும் முன்வினைப்பயன்களை அடியோடு போக்க வேண்டும். எங்களுக்கு புதிய பிறப்பினைத் தர வேண்டும். அறிவுத்தெளிவும், மகிழ்ச்சியும் அருள வேண்டும்.
-பாரதியார்


Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement