படித்தால் மட்டும் போதுமா?
ஜூன் 19,2010,
09:06  IST
எழுத்தின் அளவு:

* குழந்தைகளின் மனம் கள்ளம் கபடம் இல்லாமல் தூய்மையாக இருக்கும். புடலங்காயில் கல்லைக் கட்டினால், வளையாமல் நேராக வளர்வது போல, பெற்றவர்களும், ஆசிரியர்களும், பிள்ளைகளுக்கு கட்டுப்பாடு என்னும் கல்லைக் கட்டினால் அவர்கள் நேர்வழியில் நடப்பார்கள்.
* கோடரியால் சந்தனமரத்தை வெட்டும்போது, கோடரிக்கும் சந்தன வாசனை வந்துவிடும். அதுபோல, பிறர் தமக்கு தீங்கு நினைத்தாலும் கூட, நல்லவர்கள் தங்கள் இயல்பை மாற்றிக் கொள்வதில்லை.
* இன்றைய பிள்ளைகள் பள்ளிக்கூடங்களில் தாவரங்களின் இயல்பைக் கற்கிறார்கள். கணிதத்தில் அல்ஜீப்ரா கணக்குகளைச் செய்கிறார்கள். ஆனால், நடைமுறையில் அதை பயன்படுத்த தவறி விடுகிறார்கள். சாதாரண ஜலதோஷத்திற்கு துளசியைச் சாப்பிடவேண்டும் என்று நினைப்பது கூட இல்லை.
* நம் இதய நிலத்தில் செய்ய வேண்டிய முதல்பணி அதைச் சுத்தம் செய்து பண்படுத்துவது தான். பின்னர் அன்பெனும் நீர் பாய்ச்சி இறைநாமம் என்னும் விதையை இட்டு வளர்த்துவர வேண்டும். அதில் உண்டாகும் பழங்களை உண்டால் வாழ்வு வளம்பெறும்.
-சாய்பாபா


Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement